சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்

diabetic-patient-foods

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள்:

கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், து.பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு.

காய்கறிகள்:-  கேரட், பீட்ருட் தவிர்த்து மற்ற காய்கறிகளை சாப்பிடலாம். எல்லா கீரை வகைகளையும் சாப்பிடலாம்.

பழங்கள்:-  ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி போன்ற பழ வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம், கொழுப்பு நீக்கப்பட்ட பால், அதிக புளிப்பில்லாத மோர், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்லெண்ணை, ஆலிவ் எண்ணெய், சர்க்கரை இல்லாத காபி, டீ அளவோடு சாப்பிடவும். முந்திரி, பாதாம், வால்நட் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:  உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், சர்க்கரையில் செய்த இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், கேக் வகைகள், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அண்ணாசிபழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரீச்சம்பழம், எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணை, நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணை, வனஸ்பதி, பாமாயில், எண்ணையில் பொறித்த உணவு வகைகள், (சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா) பிரட், பன், கேக், பப்ஸ், பிஸ்கட், ஊறுகாய் வகைகள், வேர்கடலை சாப்பிடக்கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*