சிறுநீரக நோய் தீர்க்கும் ஸ்தலம்

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ளது அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரே கல்லால் ஆன “பஞ்ச நதன நடராஜர்” அருள்புரிகிறார். இத்தல நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது.

Panchanadhana Nataraja Idol Ootathur

சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

சிவகாமி அம்மையும் அழகோ அழகு.வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட சிறுநீரக நோய்கள் தீரும் அனுபவ உண்மையாகும்.

சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

சிவகாமி அம்மையும் அழகோ அழகு. வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட சிறுநீரக நோய்கள் தீரும் என்பது அனுபவ உண்மை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*