மாத அமாவாசை விரதம் தரும் நன்மைகள்

amawasai

மறைந்த முன்னோர்களின் ஆசி நமக்கு என்றென்றும் தேவை என்பது ஐதீகம். அதனால் தான் முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணமும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது.

எந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய… அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும். மாதந்தோறும் அமாவாசை நாளிலும் விரதமிருந்து தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

மாத அமாவாசை அன்று முடிந்தால், இயலாதோருக்கு உடையோ உணவோ வழங்கி உதவுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தால் குளிர்ந்து போய், பித்ருக்கள் பூரணமாக உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

அமாவாசை அன்று விரதம் இருந்து மறைந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்து இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவிகளை செய்து வந்தால் நம் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை தருவார்கள்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்து காகத்திற்கு சாதம் வைத்து முன்னோர்களை வழிபாடு செய்யலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*