சனி பகவானுக்குரியவை

shanidev

நவகிரகங்களில் முக்கிய இடத்தை பிடிப்பவர் சனி பகவான். எவருக்கும் அஞ்சாதவர் கூட சனி என்றால் சற்று நடுங்கித்தான் போவார்கள். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் தண்டிப்பவர். அதேநேரம் எந்நிலையிலும் தர்மத்தை கைவிடாது நேர்மையாகவும், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இயன்ற உதவிகளை செய்து, பக்தியும் நற்குணங்களும் பெற்று வாழ்பவர்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல், சகல வளங்களையும் கொடுத்து பாதுகாப்பு அரணாய் இருந்து காப்பவர். அதனால் தான் “சனி கொடுத்தால் எவர் தடுப்பார்” என்ற வழக்கு உண்டாயிற்று. சிவபெருமானிடமிருந்து “ஈஸ்வர” பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனிபகவானுக்கு உரியவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

தானியம் – எள்
நிறம் – கருப்பு
குணம் – தாமஸம்
சுபாவம் – குரூரர்
உலோகம் – இரும்பு
காரகம் – ஆயுள்
சுவை – கசப்பு
திசை – மேற்கு

நட்சத்திரங்கள் – பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ஆட்சி வீடு – மகரம், கும்பம்
உச்ச வீடு- துலாம்
மூலத்திரிகோண வீடு – கும்பம்
நட்பு ராசி – ரிஷபம், மிதுனம், கன்னி
சமமான ராசி – தனுசு, மீனம்
பகை ராசி – கடகம், சிம்மம், விருச்சிகம்
நீச்ச ராசி – மேஷம்

நட்பு கிரகங்கள் – புதன், சுக்ரன், ராகு, கேது
சம கிரகம் – குரு
பகை கிரகங்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*