
ஜாதகத்தில் களத்திரகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். முழு சுபகிரஹமான சுக்கிரன் மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர். சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். அத்தகைய சுக்கிர பகவானுக்குரியவற்றை கீழே காணலாம்,
குலம் – பிராமணர்
ரத்தினம் – வைரம்
வாகனம் – கருடன், குதிரை
குணம் – ராஜஸம்
நிறம் – வெண்மை
நாடி – சிலேஷ்ம நாடி
சமித்து – அத்தி
சுவை – புளிப்பு
பஞ்சபூதம் – நீர்
திசை – தென்கிழக்கு
ஆட்சி வீடு – துலாம்,ரிஷபம்
மூலத்திரிகோணம் – துலாம்
உச்ச வீடு – மீனம்
நீச்ச வீடு – கன்னி
நட்பு வீடு – மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
பகை வீடு – கடகம், சிம்மம்
தெய்வம் – லக்ஷ்மி, இந்திரன், வருணன்
Leave a Reply