பிரதோஷ மகிமை

pradhosam

பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம்.

ஒவ்வொரு நாளும் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ நேரமாகும். இது `தினப் பிரதோஷம்’ எனப்படும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு.

பிரதோஷ நேரத்தில் நாம் எந்த அபிஷேகப் பொருளைக்கொண்டு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்கள் உண்டு. அவை,

பால் – நோய் தீரும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – பல வளமும் உண்டாகும்
தேன் – இனிய சரீரம் கிட்டும்
பழங்கள் – விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
நெய் – முக்தி பேறு கிட்டும்
இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் – சுகவாழ்வு கிட்டும்
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

நீங்களும் மேற்கண்ட பலன்களை பெற வேண்டும் என்றால், அந்த பொருட்களை பிரதோஷ பூஜைக்காக இயன்ற அளவு வாங்கிக்கொடுப்பது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*