
ஜோதிடத்தில் அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாய் பகவான் வீரத்திற்கு உரிய கிரகம் ஆவார். பெண்களின் களத்திர காரகனாக (திருமணத்தை முடிவு செய்பவராக) இருப்பவர். உக்கிர கிரஹமாக கருதப்படும் செவ்வாய் அருள் பெற்றவர்கள் இராணுவம், காவல்துறை போன்ற பாதுகாப்பு துறையில் மிக உயர்ந்த பதவிகளைப் பெறுவார்கள். பூமிகாரகராகவும் செவ்வாய் திகழ்வதால் நில, புலன்கள் சம்பாதிப்பதற்கும் செவ்வாயின் அருள் தேவை. மங்களகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானுக்குரியவற்றை பற்றி கீழே காண்போம்,
காரகம் – சகோதரம்,பூமி
நிறம் – சிவப்பு
தானியம் – துவரை
உலோகம் – செம்பு
குணம் – ராஜஸம்
சுபாவம் – குரூரர்
சுவை – துவர்ப்பு
திசை – தெற்கு
நோய் – பித்தம்
அதிதேவதை – சுப்பிரமணியர்
பால் – ஆண்
ஆட்சி ராசி – மேஷம், விருச்சிகம்
நட்பு ராசி – சிம்மம், தனுசு, மீனம்
சமமான ராசி – ரிஷபம், துலாம், கும்பம்
பகை ராசி – மிதுனம், கன்னி
உச்ச ராசி – மகரம்
நீச்ச ராசி – கடகம்
Leave a Reply