கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது.
வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது. பல்வலி ஏற்படும் போது இலங்கதைலத்தை இடித்து சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து வலி ஏற்பட்ட இடத்தின் மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக பயன்படுகிறது.
இலவங்கத்தின் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். வழிவழியாக வரும் பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால் செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது.

Leave a Reply