துளசியின் மகத்துவம்

துளசி இலையின் மருத்துவ குணங்கள்
துளசி இலையின் மருத்துவ குணங்கள்

துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூர துளசி உள்பட 300-க்கும் மேற்பட்ட துளசி வகைகள் உள்ளன. இந்த துளசி உடலின் நோய்த் தொற்றுக்களை நீக்கும்

துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். ‘திருத்துழாய்’ என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும்.  மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டு துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும்.
துளசிச் செடி அதிக அளவில் வளரும் இடங்களில் காற்றில் இருக்கும் புகை கிருமிகள் போன்ற மாசுகள் அழிந்து காற்று மண்டலம் தூய்மை அடையும்.

வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப் பெறலாம்.

துளசிச் செடியின் வாடையின் காரணமாக கொசுக்கள் வருவதில்லை. இதனால் மலேரியா நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. மலேரியா நோய் கண்டவர்கள் துளசி இலையைத் தினமும் மென்று உட்கொண்டு வந்தால் மலேரியா நோய் நீங்கும்.

தொழு நோயை குணமாக்கும் மருந்துகளில் அதிக அளவில் துளசி சேர்க்கப்படுகிறது.
உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்து வர பிரச்சினை சரியாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*