கர்ப காலத்தில் பெண்கள் நல்லதையே கேட்க வேண்டும்

baby-care
baby-care

கரு உருவாக ஆரம்பிப்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பும் தொடங்கிவிடுகிறது. புதியதாக இதை படிப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. கரு உருவான முதல் வாரத்திலேயே குழந்தையின் மூளை உருவாக ஆரம்பித்துவிடுகிறது.

அதற்கடுத்து இருபதாவது வாரத்தில் நன்றாக கேட்கும் சக்தியையும் பெற்றுவிடுகிறது குழந்தை.  கேட்கும் சக்தியைப் பெற்ற குழந்தையால் கற்ப பையில் இருந்தாவாறே வெளியில் தாய் கேட்கும் குரல், ஒலிகளை சிசுவும் கேட்க முடியும்.

இதனால்தான் கர்ப காலத்தில் பெண்கள் நல்லதையே கேட்க வேண்டும். நல்ல சூழலில் இருக்க வேண்டும், நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என சொல்கிறார்கள். தாயிடமிருந்து பெரும்பாலான விடயங்கள் சிசுவை சென்றடைவதால் இவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அறிவுறுத்தபடுகிறார்கள்.

கர்ப பையில் இருந்து வெளிவந்த பிறகு, குழந்தை மெல்ல மெல்ல வளரும்போது, வீட்டு சூழல் எப்படி உள்ளதோ அதற்கேற்றவாறே வளர தொடங்குகிறது. எனவே வீட்டுச் சூழலை

நல்ல அமைதியான, சுத்தமான, காற்றோட்டமான சூழலாக உருவாக்கி கொடுக்க வேண்டும்.

தாயின் செயல்களையே பெரும்பாலான குழந்தைகள் பின்பற்றுகிறது. தாயின் செயல்பாடுகள் நன்முறைகள் இருந்தால், பிறக்கும் குழந்தையின் செயல்களும் அவ்வாறே இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் எதைப் பார்க்கிறார்களோ யாரிடம் பழகுகிறார்களோ அதைப்போலவே, அவர்களைப் போலவே கற்றுக்கொள்ள முனைவார்கள். குறிப்பாக Metric School, Play School போன்ற பாலர் பள்ளிகளில் உள்ள ஆயா, ஆசிரியை போன்றோர்களின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றத் தொடங்குகிறார்கள்.

இப்படி சின்ன சின்ன விடயங்ளிகளிலும் கவனம் செலுத்தி, குழந்தைகள் வளர்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*