சத்து நிறைந்த சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்

millet-veg-noodles

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இன்று காய்கறிகள் சிறுதானிய மாவில் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

சிறுதானிய சத்து மாவு – ஒரு கப்
விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சுடுநீர் சோ்த்து இடியாப்ப மாவு பதத்துக்குப் பிசையவும்.

பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சோ்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சோ்த்து மேலும் வதக்கவும்.

அடுத்து அதில் காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய்கறிகள் வெந்தவுடன் உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் வேகவைத்த இடியாப்ப நுாடுல்ஸ் சோ்த்துக் கிளறி இறக்கவும்.

சூப்பரான சத்தான சிறுதானிய வெஜ் நுாடுல்ஸ் ரெடி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*