வீட்டில் தனியாக இருக்கிறீர்களா – பெண்களே உஷார் !

6a00

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களின் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க, பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.

வீடுகளில் பெண்கள் தனியாக இருக்கும் நேரத்தை குறிவைத்துதான் பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. ஏதேனும் காரணத்தைச் சொல்லி, வீட்டை நாடி வரும் நபர்கள், சமயம் பார்த்து பெண்களை ஏமாற்றி பணம், நகை மற்றும் மற்ற பொருட்களைத் திருட்டிச்செல்கின்றனர். பெருகிவரும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க, பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். அதற்கான சில யுக்திகளைப் பார்ப்போம்.

 

eyehole

* வீட்டின் வாசல்கதவில் ஐ ஹோல் (Eye Hole) பொருத்தவேண்டியது அவசியம். தனி வீடுகளில் இருக்கும் பெண்கள் கட்டாயம் காலிங் பெல் அடிக்கும் நபர் யார் என்பதை, ஐ ஹோல் வழியே பார்த்துவிட்டு பழக்கப்பட்ட நபர்தான் என உறுதி செய்துகொண்டு கதவைத் திறக்க வேண்டும்.

* பல்வேறு காரணங்களுக்காக வீட்டுக்கு வரும் முன்பின் பழக்கமில்லாத நபர்களை, வீட்டுக்குள் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் வேலை போன்ற வீட்டுக்குள் செய்யவேண்டிய வேலைகளுக்கு, சம்மந்தபட்ட வேலையாள் மீது எவ்வித சந்தேகமும் இல்லாத பட்சத்தில் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கலாம்.

* வீட்டின் மெயின் மற்றும் உட்புற அறைகளின் எல்லாக் கதவுகளுக்கும் லாக் சரியாக வேலைசெய்கிறதா என அவ்வபோது செக் செய்து கொள்ள வேண்டும்.

doorlock

* அருகில் வீடுகள் இல்லாதவர்கள், தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள எமர்ஜென்ஸி அலாரம் செட் செய்துவைப்பது நல்லது. இதனால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தங்களுக்கு மட்டுமே தெரிந்த கருவிகளை இயக்கி, அலாரம் ஒலிக்கச் செய்யலாம். மேலும், அதிகாலை மற்றும் இருள் சூழ்ந்த மாலை மாலைப் பொழுதுகளில் தனியாக நடைபயிற்சி செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

பவர் பாக்ஸையும் பூட்டி வைப்பது சிறந்தது. இதனால் திருடர்கள் எளிதில் கரண்ட் ஆஃப் செய்து, திருட முயல்வது தடுக்கப்படும். மேலும், இன்வர்டர் நன்கு வேலை செய்கிறதா என்பதையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செக் செய்ய வேண்டும்.

* பெண்கள் தங்கள் போன் நம்பரை முன்பின் தெரியாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம். தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து போன் வாயிலாக தொல்லைகள் வந்தால் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யவும்.

* தங்கள் குழந்தைகளிடம் முன்பின் தெரியாதவர்களிடம் பழகாமலும், அவர்களிடம் போன் நம்பர், வீட்டின் முகவரியை சொல்லக்கூடாது எனவும் சொல்லி பழக்கப்படுத்தவேண்டும்.

* அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்கள் தங்களை யாரேனும் பார்க்க யாராவது வந்தால், உடனே எங்களுக்கு போன் செய்து கேட்டுவிட்டும், பின்னர் வரும் நபரின் விபரங்களை பெற்றுவிட்டும்தான் அனுப்பவேண்டும் என குடியிருப்பின் செக்யூரிட்டியிடம் சொல்லி வைக்க வேண்டும்.

* வீட்டு உள்வேலைகளுக்கு பெண் வேலையாட்களையும், வீட்டின் வெளி வேலைகளுக்கு ஆண் வேலையாட்களையும் நியமித்துக்கொள்வது சிறந்தது.

* பெண்கள் வெளிப்பயணம் மேற்கொள்ளும்போது, தங்கள் குடும்பத்தார், குழந்தைகள், முக்கிய விபரங்களை போன் வாயிலாக உரக்கப் பேசுவதைத் தவிர்க்கவும்.

* அவசிய செலவீனங்களுக்கானது போக, அதிகப்படியான பணத்தை வீட்டில் வைக்காமல் தங்கள் வங்கிக் கணக்கிலே வைப்பது நல்லது. மேலும், விலை உயர்ந்த நகைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

* நியூஸ் பேப்பர், பால், காய்கறிகள், பூ விற்பவர், துணி சலவை செய்பவர், கேபிள்காரர்கள் போன்ற நபர்களிடம் கவனமுடன் பழக வேண்டும். அவர்களில் நம்பிக்கையானவர்களை மட்டுமே தேவையான சமயத்தில் வீட்டினுள் அனுமதிக்க வேண்டும்.

* உங்கள் செல்போனில் பாதுகாப்பு முறைகளுக்கான அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, அதில் கணவர், பிள்ளைகள் போன்ற முக்கியமான நபர்களின் எண்களைச் சேமித்து வைக்க வேண்டும். ஏதாவது ஒரு ஆபத்து என்றால், கணவருக்கும் பிள்ளைக்கும் உடனே தகவல் அனுப்ப முடியும்.

* வெளியூர் செல்ல நேர்ந்தால், வீட்டைப் பார்த்துக்கொள்ள ஒரு நம்பிக்கைக்கு உரிய ஆட்களை விட்டுச்செல்வது சிறந்தது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளே, மேற்கண்ட பாதுகாப்பு ஆலோசனைகளைக் கடைபிடித்து உங்கள் மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*