பொடுகு நீங்க

hair-dandruff
hair-dandruff
  • வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
  • பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
  • தலையில் புண் அல்லது வெட்டுக்காயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன் படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
  • சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம். “பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்க்கவும்.
  • சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கவும். அப்புறம் 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
  • பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
  • தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
  • வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கவும்.
  • பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுக்கு வராது.
  • வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உஷ்ணமும் குறையும்.
  • அருகம்புல் சாறு எடுத்து, தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி, அப்புறம் ஆற வைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
  • வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*