பெண்களே பென்சில் கூட ஆயுதம்!

pengal-safety
pengal-safety

நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசலில் சிலர் பெண்களின் காலை சுரண்டுவார்கள் அவர்களை செருப்பால் அடிக்கணும் போல தோணும் ஆனால் அந்த கூட்டத்தில் குனிந்து எடுக்க முடியாது. அதற்காக கவலைப்படாதீர்கள் உங்கள் செருப்பு காலை எடுத்து அவன் காலில் வைத்துவிடுங்கள் அவன் கால் கால் என்று கத்துவான் நீங்கள் காதில் வாங்காதீர்கள் அவனால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

இருக்கையின் இடையில் கையை விட்டு சில்மிஷம் செய்வார்கள் நீங்கள் பயந்து ஒதுங்க தேவையில்லை. நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் உங்கள் கை பையில் பேனாவோ பென்சிலோ கண்டிப்பாக இருக்கும் அதை எடுத்து பலம் கொண்டவரை குத்திவிடுங்கள் கொஞ்சம் கூட கத்தாமல் ஒதுங்கிவிடுவான். இதை நீங்கள் பயப்படாமல் செய்யலாம் ஏனென்றால் அவனால் அதை வெளியில் சொல்ல முடியாது சொன்னால் அது அவனுக்கு அசிங்கம் அப்படியே சொன்னாலும் கூட்டத்தில் உள்ளவர்கள் கும்மியடித்து விடுவார்கள்.

பிறகு அவன் வேற எந்த பெண்ணிடமும் இது போல் சில்மிஷம் செய்யமாட்டார்கள் நாம் எதிர்க்காமல் விட்டுவிட்டால் எல்லா பெண்களும் இப்படிதான் என்று நினைத்து விடுவான் அதற்கு நாமே வழிவகை செய்ததுபோல் ஆகிவிடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*