
பிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கிரினி பழம் (ஸ்வீட் மெலன்) – சிறிய பழம் ஒன்று
பிஸ்தா ஐஸ்கிரீம் – முன்று பெரிய கரண்டி (அ) ஒரு கப்
சர்க்கரை – சிறிது
ஐஸ் கட்டிகள் – 10
உப்பு – அரை சிட்டிக்கை
செய்முறை:
கிர்னி பழத்தை (ஸ்வீட் மெலன்) தோலை நீக்கி இரண்டாக அரியவும்.
உள்ளே உள்ள கொட்டைகளை சிறிது பழத்தோடு ஸ்பூன் கொண்டு வழித்தெடுக்கவும்.
கொட்டைய மட்டும் நீக்கி விட்டு அரிந்தால் சில பழங்கள் கசக்கும்.
பிறகு பொடியாக அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் அரிந்த பழம்,ஐஸ் கட்டிகள், பிஸ்தா ஐஸ் கிரீம் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.சுவையான பிஸ்தா மெலன் ஜூஸ் ரெடி.
குறிப்பு:
இதை பாலுடன் சேர்த்து தான் ஜூஸ் தயாரிப்பார்கள். ரொம்ப அருமையாக இருக்கும்.
மற்ற பழங்களுடன் சேர்த்து காக்டெயில் ஜூஸ் போலவும் தயாரிக்கலாம்.வெரும் பழத்தை கட் செய்து சாப்பிட்டாலும் நல்ல இருக்கும்.
இது இங்குள்ள ஹாஸ்பிட்டலில் மதிய உணவிற்கு குழந்தை பெற்ற வர்களுக்கு மீல்ஸுடன் இந்த பழம் ஒரு துண்டும் வைப்பார்கள்.
கிர்னி பழம் வாங்கி வந்து வைத்தாலே அந்த இடம் முழுவதும் மணமாக இருக்கும். முன்று டம்ளர் அளவிற்கு வரும்.
ரொம்ப திக்காக இருந்தால் சிறிது தண்ணீய சேர்த்து அடித்து கொள்ளவும்.
கோடையின் வெப்பத்துக்கு அன்றாட உணவில் இது ஜூஸ்வகைகள் குடிப்பது நல்லது.
Leave a Reply