
வயிற்று வலி குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.
மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.
பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.
அத்திப் பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.
கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Leave a Reply