
அதைச் செய்யாதே… இதைத் தொடாதே என்று வீடே அதிரும்படி கத்தக் கூடாது.
சொல்வதை மீறி இப்படிச் செய்தால் என்ன செய்வேன் தெரியுமா?’என்று மிரட்டவும் கூடாது.
எப்போதுமே இதுபோல நெகட்டிவாக அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது. இப்படி பேசினால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். அதற்காகவே உங்கள் வார்த்தையை மீறி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னதைச் செய்துகாட்ட நினைப்பார்கள்.
உங்கள் அதிரடி அணுகுமுறையைக் கொஞ்சம் மாற்றி, இதமாக எடுத்துச் சொல்லிப் பாருங்களேன். வேண்டாத, உடலுக்குத் தீங்குதரக்கூடிய செயல்களை குழந்தை செய்தால் ஆத்திரப்படாமல் வார்த்தைகளில் குழைவைக் கூட்டி, அதையெல்லாம் செய்யக்கூடாது கண்ணா… என்று சொன்னால் அதற்குக் கிடைக்கும் ரிசல்ட்டே தனிதான். அதையும் மீறி குழந்தை செய்தால், நீ இப்படி செய்தால் இப்படி ஏற்படலாம் என்று அந்தச் செயலால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் கற்பனையைச் சேர்த்து அவர்களை மிதமாக பயமுறுத்தலாம். இப்படிச் சொல்லும்போது நீங்கள் அந்த இடத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும், அடுத்தமுறை அந்தச் செயலை செய்ய குழந்தை யோசிக்கும். இதுதான் உங்கள் வெற்றி!
குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் மனநிலைக்கு வரமாட்டார்கள். பெற்றோர்தான் குழந்தைகளின் மனநிலைக்கு இறங்கிப்போக வேண்டும். அவர்களை, அவர்கள் போக்கில் விட்டுத்தான் நம் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அப்பா, அம்மா சொல்வது நம் நல்லதுக்குத்தான் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
ஒரே வரியில் சொல்வதென்றால், அவர்களை நண்பர்களாக அணுக வேண்டும்.
Leave a Reply