நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில விசித்திரமான ஃபோபியாக்கள்!

What-is-Fear-Phobia-Types

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான பயம் இருக்கும். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படுவதையே ஃபோபியா என்று அழைப்பர். ஃபோபியா என்பது இயற்கைக்கு மாறான பயம் ஆகும். ஃபோபியா உள்ளவர்கள் சாதாரணமாக பயப்படுபவர்களைக் காட்டிலும், அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொல்லப்போனால் ஃபோபியாவை ஒரு மனநோய் என்றும் கூறலாம். நாம் இதுவரை நீரைக் கண்டால் பயம், உயரத்தைக் கண்டால் பயம், பூச்சியைக் கண்டால் பயம், பூனையைக் கண்டால் பயம், எலியைக் கண்டால் பயம், தனியாக இருக்க பயம், யாராவது சப்தமாக பேசினால் பயம், ஒரு அறையில் அடைத்து வைத்தால் பயம் என்று பல ஃபோபியாக்களைக் கேள்விப்பட்டிருப்போம். ஃபோபியாக்களானது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் ஏற்படுவதாகும்.
ஃபோபியாக்களானது மனதை பாதிக்கும்படியான நிகழ்வுகள், குழப்பமான மனநிலை, வளரும் போது மனதினுள் ஆழமாக பதிந்த அல்லது பாதித்த விஷயத்தாலும் வரலாம்.

ஒருவருக்கு ஃபோபியாக்கள் இருந்தால், அவர்களுக்கு ஒருசில அறிகுறிகள் தென்படும். அதில் பயத்தால் உடல் நடுக்கம், அதிகமாக வியர்ப்பது, வேகமாக இதயத்துடிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படிப்பட்ட ஃபோபியாவில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் படியான சில விசித்திரமான ஃபோபியாக்களும் உள்ளன. அந்த ஃபோபியாக்கள் என்னவென்று தெரிந்தால், நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

ஹெலியோபோபியா (Heliophobia)

ஹெலியோபோபியா என்பது சூரியனைக் கண்டு அச்சம் கொள்வதைக் குறிக்கும். இது நிச்சயம் உங்கள் ஆச்சரியத்தை உண்டாக்கலாம். ஆனால் உலகில் அதிகப்படியான சூரிய வெளிச்சத்தைக் கண்டு அச்சம் கொள்பவர்களும் உள்ளனர். இத்தகைய ஃபோபியா உள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும்.

ஓகோபோபியா (Oikophobia)

Home appliances. Gas cooker, refrigerator, microwave and washing machine, blender toaster coffee machine, meat ginder and kettle. 3d illustration

இந்த வகை அச்சமானது வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர் போன்றவை குறித்ததாகும். இந்த வகை ஃபோபியாவை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் சற்று தீவிரமான மனநல பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும்.

பிலோபோபியா (Philophobia)

lonely

இந்த ஃபோபியாவானது உணர்வு ரீதியான உறவில் ஈடுபட அச்சம் கொள்வதைக் குறிக்கும். இந்த ஃபோபியா உள்ளவர்கள், திருமணம், காதல் என்று எதிலும் கவனத்தை செலுத்தாமல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்களது வாழ்க்கை வாழ்வர். குறிப்பாக இவர்கள் வாழ்நாள் முழுவதும் தனியாகவே இருக்க இருக்க விரும்புவர்.

அரசிப்புட்டிரோபோபியா (Arachibutyrophobia)

Peanut_Butter

அரசிப்புட்டிரோபோபியாவானது வேர்க்கடலை வெண்ணெய் குறித்த அச்சமாகும். அதாவது இந்த வெண்ணெயை சாப்பிட்டால், வாயின் மேல் பகுதியில் ஒட்டிக் கொள்ளும் என்று அச்சம் கொள்பவர்களைக் குறிக்கும். இந்த ஃபோபியா உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் இப்படியும் ஒரு ஃபோபியா உலகில் இருக்கத் தான் செய்கிறது.

சோம்னிபோபியா (Somniphobia)

somniphobiya

சோம்னிபோபியா என்பது தூக்கம் குறித்த அச்சத்தைக் குறிக்கும். அதாவது இந்த ஃபோபியா உள்ளவர்களுக்கு பயங்கரமான கனவுகள் வந்துவிடுமோ மற்றும் எங்கு தூங்கினால் மீண்டும் எழமாட்டோமோ என்ற அச்சம் இருக்கும். இவ்வகை ஃபோபியா உள்ளவர்கள் சரியாக தூங்கவே மாட்டார்கள். இத்தகையவர்கள் உடனே மருத்துவரை காண வேண்டியது அவசியம்.

நோமோபோபியா (Nomophobia)

cetak-layar_20180101_224727

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்டுகளை அன்றாடம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், சிலரால் அந்த பொருட்கள் இல்லாமல் இருக்க முடியாது. இத்தகையவர்களுக்கு இருப்பது நோமோபோபியா ஆகும். இந்த ஃபோபியா உள்ளவர்களால் மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவே
முடியாது.

லச்சனோபோபியா (Lachanophobia)

feaoveg

இந்த வகை ஃபோபியாவானது காய்கறிகள் குறித்த அச்சமாகும். இந்த ஃபோபியா உள்ளவர்கள் காய்கறிகளை சாப்பிட விரும்பமாட்டார்கள். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க, வைட்டமின் சப்ளிமென்டுகளை எடுப்பார்கள். இப்படியும் இவ்வுலகில் இருக்கத் தான் செய்கிறார்கள் மக்களே!

பிஸுடொட்யஸ்பிஹாஜியா (Pseudodysphagia)

Pseudodysphagia

எப்படி இந்த ஃபோபியாவின் பெயர் வாயில் நுழையவில்லையோ, அதே போல் இந்த ஃபோபியா உள்ளவர்களுக்கு எதையும் விழுங்குவதற்கு பயம் இருக்கும். இந்த ஃபோபியா உள்ள பெரும்பாலானோர் மிகவும் எடை குறைந்து காணப்படுவதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் இருப்பர். இந்த வகை ஃபோபியா மிகவும் ஆபத்தானது. இத்தகையவர்கள் உடனே மருத்துவர்களை அணுக வேண்டியது அவசியம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*