தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலன்

kamachi-vilakku
kamachi-vilakku

நல்லெண்ணை-எல்லாவித பீடைகளும் விலகும்.

கடலை எண்ணெய்-இதை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது.

விளக்கு எண்ணெய்-சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில்தான் குத்துவிளக்கை விளக்கி சுத்தப்படுத்த வேண்டும். பிற நாட்களில் சுத்தப்படுத்தக் கூடாது.

  1. நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
  2. நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
  3. தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
  4. இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
  5. விளக்கெண்ணெய்- புகழ் தரும்
  6. ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*