பெண்களுக்கு வயதிற்கேற்ப பரிசோதனை அவசியம்

health-checkup

நிறைய உடல் நல செய்திகளை இன்று பத்திரிகைகளும், ஊடகங்களும் தரும் காரணத்தினால் நிறையவே தெரிந்து கொள்கிறோம். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி இவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றோம். ஆனால் சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடை பிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.

அவரவர் உயரம், எடைக்கு ஏற்ப body man index (BMI) வேண்டும். இதனை தமிழில் உடல் நிலை குறியீட்டெண் என்று சொல்வார்கள். உயரம், எடைக்கேற்ப இந்த குறியீட்டெண் சரியாக இருக்க வேண்டும். கூடுதலாக இருப்பது பல நோய்களில் குறிப்பாக Etatolic Syndrome எனப்படும் சரக்கரை நோய், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்டிரால், அதிகமாக வயிற்றில் கொழுப்பு.

இதன் காரணமாக இருதய பாதிப்பு, பக்க வாதம் எனும் பிரச்சினைகளை எளிதில் கூட்டி வந்து விடும். இவை இந்தியர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகவே ஏற்படுகின்றன. கர்ப்பமாக திட்டமிடும் மணமான பெண்கள் முதலிலேயே நல்ல மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் நல்ல கொழுப்பு இருந்து கெட்ட கொழுப்பு நீங்க நல்ல உடற்பயிற்சி, நடை பயிற்சி மட்டுமே கை கொடுக்கும்.

  • முழு ரத்த பரிசோதனை
  • கொழுப்பு பரிசோதனை
  • சிறு நீரக பரிசோதனை
  • கல்லீரல் பரிசோதனை
  • சர்க்கரை அளவு பரிசோதனை

ஆகியவை இன்றைய கால சூழ்நிலையில் பல நேரங்களில் அவசியமாகின்றது.

கிட்டத்தட்ட 60-75 சதவீத பெண்கள் ரத்த சோகை பாதிப்பு உடையவர்களாகவே இருக்கின்றனர். மேலும் பரம்பரையாக குடும்ப நபர்களுக்கு பாதிப்பு இருப்பின் அடுத்த தலைமுறை கண்டிப்பாய் அதற்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

அதிக கார்போ ஹைடிரேட் அதாவது மாவு சத்து உணவுகளைக் குறைத்து விடுங்கள். சர்க்கரை, கொழுப்பு எல்லாம் இதிலிருந்து வந்து விடும். பெண்ணே எந்த வயதிலும் ஆரோக்கியமாய் வாழலாமே!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*