காமன்வெல்த் போட்டி – மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கம் உட்பட 3 பதக்கங்கள்

commonwealth

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்கப்பதக்கம் வென்றார். இவர் கனடா வீரரை தோற்கடித்தார். இது மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்மாகும்.

இதையடுத்து, 53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை பபிதாபோகட் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் கனடா வீராங்கனையிடம் இறுதி போட்டியில் தோல்வியடைந்தார்.

மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கிரண் வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 13 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 28 பதக்கம் பெற்றுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*