காமன்வெல்த் – இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்

commonwealth-Tejaswini-Sawant

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் நடைபெற்றது. இந்தியா சார்பில் தேஜாஸ்வனி சவந்த், அன்சும் மவுட்கில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தேஜாஸ்வினி சவந்த் 6 சுற்றுகள் முடிவில் 618.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை மார்டினா லின்ட்செ வெலோசோ 621 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து வீராங்கனை 618.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*